Friday, February 4, 2011















Monday, November 2, 2009

பெண்ணே ...
உன்  புன்னகையில்
சொர்கத்தை  கண்டேன்!
உன்  கோபத்தில் 
நரகத்தை  கண்டேன்!
உன்  மௌனத்தில்
சம்மதம்  கண்டேன்!
உன்  நடையில்
மென்மையை கண்டேன்!
உன்  இதழில் 
உண்மையை  கண்டேன்!
உன்  விழிகளில் 
என்  காதலை  கண்டேன்!
ஆகையால்  நான் காதல் கொண்டேன்!!!

உறக்கம் பிடிக்கும்..
கனவாக நீ இருந்தால்..!!

உணவு பிடிக்கும்..
நீ ஊட்டி விட்டால்..!!

மயங்குவது பிடிக்கும்..
உன் மடி கிடைத்தால்..!!

வர்ணம் பூசுவது பிடிக்கும்..
உன் உதட்டின் மேல்
என் உதட்டால் இடுவதாய் இருந்தால்..!!

மரணம்கூட பிடிக்கும்..
உன் தோளில் சாய்ந்து விடுவதாய் இருந்தால் ....!!

மலர்களை  விட  எனக்கு
மலரின்  மனம்  பிடிக்கும்
நிலவை  விட  எனக்கு
நிலவின்  குணம்  பிடிக்கும்
மலையை  விட  எனக்கு
மலையின்  எழில்  பிடிக்கும்
காதலை  விட  எனக்கு
காதலியின்  மோதல்  பிடிக்கும்
வேதனையை  விட  எனக்கு
வேதனையில்  சாதனை  பிடிக்கும்  - ஆனால் 
உன்னில்  எனக்கு  பிடித்தது
உன்  புன்னகை  மட்டும்தான்.

Monday, October 26, 2009

இயற்கையின் பரிசு வாழ்க்கை
வாழ்க்கையின் பரிசு காதல்
காதலின் பரிசு முத்தம்

உன் இனிய முத்தங்களை
காத்திருக்க வைக்காதே
உன் உதடுகள் உலர்ந்து போகும்
என் கண்கள் ஈரமாகும்
ஆமாம் கண்ணே
பாதுகாத்து வைத்த முத்தங்களெல்லாம்
வீணடிக்கப்பட்ட முத்தங்கள்

இது
மௌனம் பேசுகின்ற பாஷை.
அளவில்லா சந்தோஷத்தின் ஒரு
முன்னோடி உறுதிமொழி
இளமை இதயங்களின் இனிய முடிச்சு
ஊமை ஒப்பந்தம்
காதலின் முதல் பனிப்பொழிவு

நீயும் நானும் அணைத்தபடி
காதல் கொண்ட நடனமாடும்
இந்த இனிய இரவிற்காக
எத்தனை தவமிருந்தேன்

உன் கைகளை இறுக்கி எடுத்துரைப்பேன்
நீ அறியாத காதலை உனக்கு உணர்த்துவேன்
வா அன்பே வா
அணைப்பும் வெம்மையும் சொல்லட்டும்
பயங்களும் ஐயங்களும் விலகி ஓடட்டும்
நாம் பரிமாறும் இந்த முதல் முத்தத்தில்

உன் கரங்கள் என்னைத் தழுவ‌
நான் உன் மேல் சாய‌
நம் இருவரின் சுவாசம் ஒன்றாக
நான்கு கண்களும் மூட
இதழ் இரண்டும் இணைய‌
மென்மையாக‌ இனிமையாக
மேனியெங்கும் மின்சாரம் தாக்க
உள்ளத்து உணர்வுகள் எங்கோ செல்ல
உன் கள்ளச்சிரிப்பு சொல்லியது
”இது மொத்த குத்தகையின்
ஒரு சிறிய அச்சாரம்” என்று

இனியவளே
காதோரமாக நீ முணுமுணுக்கவில்லை
என் இதயத்தோடு பேசுகிறாய்
உதட்டுக்கு நீ முத்தம் கொடுக்கவில்லை
என் ஆன்மாவோடு கலக்கிறாய்

உப்புத்தண்ணீரைக் குடிப்பது போல் தான்
இந்த முதல் முத்தம்
கொஞ்சம் குடித்தேன்
இன்னும் நிறைய
தாகம் எடுக்கிறது.

ஆனாலும் முதல் முத்தமே
சூரிய ஒளி பனித்துளியைக் குடிப்பது போல்
என் உயிரையே உறிஞ்சிச் சென்று விட்டது

Sunday, October 25, 2009

நான்  காற்றாய்  இருந்தால்  – அது
உன்னில்  இருந்து  மட்டுமே  வீச  வேண்டும்

நான்  நரம்பாய்  இருந்தால்  – அது
உன்  ரத்தத்தை  மட்டுமே  கடத்த  வேண்டும்

நான்  நிழலாய் இருந்தால்  – அது
உன்னில்  இருந்து  மட்டுமே  உருவாக  வேண்டும்

என்னகு  காதல்  என்ன்று  இருந்தால்  – அது
உன்னிடம்  மட்டுமே  வேண்டும்

இதழ்களின்
மொழிகளைப்போல
இதயங்களின் மொழிகளும்
வேறுவேறு

இறுகிக்கிடக்கும்
எந்தவோர் இதயத்தையும்
அதன் பிரத்தியேக மொழியறிந்த
இன்னோர் இதயத்தால் மட்டுமே
தட்டியெழுப்ப முடியும்

இதய மொழியறிந்த
இதங்களைச்
சேகரித்து வாழ்வதே
இதய வாழ்க்கை

;;